தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்று சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
தஞ்சை டெல்டா பகுதிகளில் விவசாய நிலத்துக்கு அடியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்துக்கு நிச்சயமாக மத்திய அரசு மதிப்பு அளிக்கும்; கவலை வேண்டாம் என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் உத்தரவாதம் அளித்திருக்கிறார் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.