Take a fresh look at your lifestyle.

மே 5–ந் தேதி ஈரோட்டில் வணிகர் தின மாநாடு: மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்பு

49

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5 ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாடு குறித்து சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மே-5, 40வது வணிகர் தின மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகின்ற மே-5ஆம் நாள், கொங்கு மண்டலம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், அகில இந்திய தேசிய வணிகர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள், வணிக முன்னோடிகள், தொழிலதிபர்கள் வணிக முக்கியஸ்தர்கள் பேரமைப்பின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு, மாநாட்டினை மிகப்பிரம்மாண்மாக நடத்தி சிறப்பிக்க இருக்கிறார்கள்.

அதற்கான ஆயத்தக் கூட்டங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் பேரமைப்பு நிர்வாகிகள் அனைவரின் பங்கேற்புடன், ஆலோசனைக் கூட்டங்கள், மண்டல, மாவட்டக் கூட்டங்கள் மிகப்பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம், ஜெய்டூண் ஹோட்டலில் நடைபெற்றது. சென்னை மண்டலத்தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை வகித்தார். பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மாநாடு சம்பந்தமாக உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஈரோட்டில் நடைபெறும் மே-5, 40வது வணிகர் தினம், வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் சென்னை மண்டலம் சார்பில் 7 மாவட்டங்களிலிருந்து 50 ஆயிரம் வணிகர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்பது என உறுதியேற்கப்பட்டது.

சென்னை பெருநகரில் உள்ள அனைத்து தொழில் வணிக உரிமங்களும் மார்ச் 31 வரை புதுப்பித்துக்கொள்ள மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. மார்ச் மாதம் வருமானவரி, சொத்துவரி, தொழில் வரி, ஜி.எஸ்.டி ஆண்டரிக்கை போன்ற அனைத்தும் மார்ச் 31க்குள் முடிக்கவேண்டிய நிர்ப்பந்தங்களும், அழுத்தங்களும் இருப்பதனால், தொழில் வணிக உரிமத்தை ஏப்ரல் 30ஆம் தேதிவரை அபராதம் இன்றி புதுப்பித்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

உணவுப்பாதுகாப்புத்துறையால் வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் எடுத்தல் போன்றவற்றில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றிருந்ததை, ஆண்டுக்கு ஒருமுறை என்ற மாற்றத்தால் வணிகர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஏற்கனவே இருந்த உரிம நடைமுறையை அதாவது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மீண்டும் பழைய நடைமுறையினை அமல்படுத்திட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

நிஷிஜி வரி விதிப்பில், நிஷிஜிஸி 9/9சி முறையை அறவே ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் வரி விதிப்பு முறைகளின் முரண்பாடுகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வணிகர்களுக்கு, வணிகவரிதுறை மூலம் பல இலட்சங்கள் வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாநில அரசு கவனத்தில் கொண்டு, வணிகர்களை காத்திட உடனடியாக சமாதான திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதனால் அரசுக்கு பெரும் வரி வருவாய் வர வாய்ப்பு உள்ளது என இக்கூட்டம் தெரிவித்துகொள்கின்றது.

நகராட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளுக்கான அதிகபடியான வாடகை விதிப்பு, முன்தேதியிட்டு வாடகை வசூலிப்பு போன்றவற்றை வரைமுறைப்படுத்தியும், இது சம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும் எனவும், வணிகக் கடைகளுக்கான சொத்துவரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதையும், குறைத்திட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

எப்பணியாயினும் எடுத்துசெய்ய முன்வரும் அண்டை மாநில தொழிலாளர்களின் பங்களிப்பு தமிழக வணிகம், உற்பத்தித்துறை, கட்டுமான தொழில் என உழவுத்தொழில் வரை நிறைந்து கிடக்கிறது. ஒருவகையில் தமிழகத்தை உற்பத்தி நிறைவான மாநிலமாக மாற்றிட, அண்டை மாநில தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம் என்பதோடு, மாநில வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி, விரிவான வணிகம், முறைசாரா தொழிலாளர் பற்றாக்குறையை என அனைத்தையும் நிறைவு செய்யும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதிசெய்திட ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.