சென்னை, ராமாபுரம் பகுதியில் காப்பர் காயில்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது 3.5 கிலோ காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, இராமாபுரம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). ஏ.சி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். ஜெயக்குமார் தனது வீட்டின் வெளியே பழைய ஏ.சி இயந்திரங்களின் காப்பர் காயில்களை போட்டு வைப்பது வழக்கம். கடந்த 11.04.2023 அன்று ஜெயக்குமாரின் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஏ.சி இயந்திரங்களின் காப்பர் காயில்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் ராயலாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தனர்,
மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர். அதனையடுத்து இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை நெற்குன்றம், அன்புநகரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (24), ராமாபுரம் திருமலை நகரைச் சேர்ந்த அருண் (22) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ ஏ.சி காப்பர் காயில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ்கண்ணன் மற்றும் அருண் ஆகிய இருவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (18.04.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.