Take a fresh look at your lifestyle.

சென்னை, மாம்பலத்தில் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த இருவர் கைது

69

மாம்பலம் பகுதியில் தங்க நகை கடையில் ரிப்பேர் செய்ய கொடுத்த வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் நகை கடை ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மாம்பலம் பகுதியில் உள்ள தங்கநகைகடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சத்திய நாராயணன் (வயது 48). தங்களது தங்க நகைக் கடையில் கடந்த 10 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தங்க நகைகளை செய்யும், வேலை செய்து வந்த பிரபீர் ஷேக் என்பவர், வாடிக்கையாளர்கள் ரிப்பேர் செய்ய கொடுத்த 347 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அடகு வைத்து தங்க நகைகளை மீட்டு தரும்படி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சிஐடி நகரைச் சேர்ந்த பிரபீர் ஷேக் (32) வியாசர்பாடி பாலமுருகன் (51) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரபீர் ஷேக் மேற்படி தங்கநகை கடையின் வாடிக்கையாளர்கள், ரிப்பேர் செய்வதற்கு கொடுத்த 347 கிராம் தங்க நகைகளை, தனது நண்பர் பாலமுருகன் என்பவர் மூலம் அடகு கடையில் அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட பிரபீர் ஷேக், பாலமுருகன் ஆகிய இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.