Take a fresh look at your lifestyle.

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகம் நடத்தும் ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி

52

போதையில்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஏப்ரல் 14ம் தேதியன்று டிரையத்லான் விளையாட்டுப்போட்டி நடக்கிறது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதனை துவங்கி வைக்கிறார்.

 

ஆவடி காவல் ஆணையரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை அறவே ஒழிக்கும் பொருட்டு, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் போதையில்லா தமிழகம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரவு மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக இம்மாதம் 14ம் தேதி ஓட்டப்பந்தயம், நீச்சல் மற்றும் சைக்கிளிங் ஆகியவை அடங்கிய ட்ரையத்லான் விளையாட்டுப்போட்டி நடக்கிறது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதனை துவங்கி வைக்கிறார்.