தமிழ்நாடு அரசு, மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மீனவர்களின் வாரிசுகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்கான திறன்களை மேம்படுத்திக் கொள்ள 3 மாத கால இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 13.09.2021 அன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் இதர பாதுகாப்பு படைகளிலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேருவதற்காக ஆறு மாத கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்துவதற்காக ரூபாய் 90 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது.
இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு கடலோர கடலோர மாவட்டங்களிலிருந்து 240 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடலூர், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மையங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இலவசமாக உண்டு உறைவிடமும் மற்றும் மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 120 மீனவ இளைஞர்களுக்கு 14.03.2022 முதல் 14.06.2022 வரை பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் பங்கு பெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற மீனவ இளைஞர் இந்திய கடற்படை வீரராக தேர்வு செய்யப்பட்டு, தற்போது ஒடிசா மாநிலத்தில் கடற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
2வது அணிக்கான பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா இன்று (29.03.2023) மாலை சென்னை மெரினா கடற்காவல் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் நிலையத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ன் தலைமையில் நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்தப் பயிற்சியில் பங்குபெற்று பயன்பெற 044-28447752) என்ற எண்ணையும். விரும்பும் மீனவ இளைஞர்கள் csgtnp@gmail.com என்ற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம் என கடலோர காவல் குழுமம் அறிவித்துள்ளது.