Take a fresh look at your lifestyle.

சிம்புவின் பத்து தல: முதல் நாளே வசூல் எவ்வளவு

40

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான பத்து தல திரைப்படம் மிகுந்த எதிர்பார்புடன் நேற்று வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி, கவுதம் வாசுதேவ் மேனன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் பத்து தல படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தகவல் தற்போது வெளியாகிவுள்ளது. அதில் இப்படம் முதல் நாளே தமிழ் நாட்டில் மட்டும் ரூபாய் 12.3 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுவே நடிகர் சிம்புவின் கேரியரில் அதிக வசூல் செய்யப்பட்ட படம் என்று கூறப்படுகிறது.