Take a fresh look at your lifestyle.

இயக்குநர் மீது செக்ஸ் புகார்: நடிகை வித்யா பாலன் பகீர்

37

நடிகை வித்யா பாலனும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்து சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளார். இந்தி முன்னணி நடிகையான இவர் மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

அது தொடர்பாக வித்யா பாலன் அளித்த பேட்டியில், ‘‘என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்த படத்தின் இயக்குனரை விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்த போது நான் சந்தித்தேன். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்றேன். ஆனால் அவர் ஓட்டல் அறைக்கு போய் பேசுவோம் என்றார். ஓட்டல் அறைக்கு வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அவரது எண்ணம் புரிந்தது.

எனவே ஓட்டல் அறைக்கு சென்று அறைக்கதவை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டே அவரிடம் பேசினேன். நான் கதவை மூடுவேனா என்று எதிர்பார்த்து சிறிது நேரம் காத்து இருந்தார். நான் கதவை மூடாமல் இருந்ததால் ஒத்துழைக்க மாட்டேன் என்று புரிந்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவரது படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார்” என்றார்.