Take a fresh look at your lifestyle.

ரூ.1.20 கோடி கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

64

சேலம் வாழப்பாடியில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவின் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்கும் பொருட்டு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 12.04.2023 தேதி சேலம் அமலாக்கப்பிரிவு போலீசார் ஐஜி ரூபேஸ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் வாழப்பாடி, மேட்டுப்பட்டி சோதனை சாவடி அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வெள்ளை நிற பார்ச்சூணர் கார் TN 21 AP 5050 வேகமாக வந்தது. அதனை மடக்க முயன்ற போது அதில் இருந்த நபர் காரை விட்டு இறங்கி தப்பியோடி விட்டார். காருக்கும் சோதனை செய்ததில் உள்ளே 200 கிலோ கொண்ட கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரையும் அங்கிருந்து மீட்டனர். கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடியே 20 லட்சம் ஆகும். கஞ்சாவை பறிமுதல் செய்த சேலம் அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.