திருநங்கைகள், மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை: களஆய்வு நடத்திய 22 பேருக்கு சென்னை மேயர் பதக்கம்
சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் சேப்டிபின் (Safetipin) மற்றும் பிரஜ்ன்யா (Prajnya) என்னும் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட குடிமக்களுக்கு பாதுகாப்பான பொது இடம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பயிற்சியில் பங்கேற்று, களப்பணியாற்றியவர்களைப் பாராட்டி மேயர் ஆர்.பிரியா சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்தப் பயிற்சியில் 13 பெண்கள், 8 ஆண்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 22 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் சென்னை முழுவதும் உள்ள பஸ் நிறுத்தங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட 46 போக்குவரத்து இடங்களில் நகர்ப்புற திட்டமிடலில் பாலினம் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும், பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் அவற்றைச் சார்ந்துள்ள சாலைகள், கழிப்பறைகள், சுரங்கப்பாதை, நடைபாதை போன்ற இடங்கள் பெண்கள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளதா என களஆய்வு மேற்கொண்டனர்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்று, களப்பணியாற்றியவர்களைப் பாராட்டி மேயர் பிரியா சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.