முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.03.2023) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 24 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.