அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் மீண்டும் தங்கள் பதிவை புதுப்பித்து கொள்ளவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் துவக்கி வைத்தார். 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவதே இலக்கு என்றும் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.