Take a fresh look at your lifestyle.

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

37

காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக சிறைத்துறை முதல்நிலை மற்றும் இரண்டாம் காவலர்களின் இடர்படி, மிகை நேர ஊதியத்தை உயர்த்தி வழங்கி நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:–

1. அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் நூலக வசதிகளை மேம்படுத்துதல். சிறைவாசிகளின் கல்வி மேம்பாட்டிற் காகவும், வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும், அவர்கள் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் உள்ள சிறை நூலகங்கள் ரூ. 208.74 லட்சம் தொடரா செலவினத்தில் மேம்படுத்தப்படும்.

2. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் பணிபுரியும் முதல் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ. 200 லிருந்து ரூ. 500 ஆக ஆண்டுக்கு ரூ. 324.32 லட்சம் தொடர் வழங்கப்படும்.

3. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கு (இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் கண்காணிப்பாளர்கள் வரை) Allowance). காவல்துறை பணியாளர்களுக்கு இணையாக, ரூ. 800 லிருந்து ரூ. 1000-ஆக ஆண்டுக்கு ரூ. 106.00 லட்சம் தொடர் செலவினத்தில் உயர்த்தி வழங்கப்படும்.

4. சிறைக்குள் தடை செய்யப்பட்டமின்னணு கருவிகள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு 13 நேரியல் அல்லாத சந்திப்பு கண்டுபிடிப்பான் (Non Linear Junction Detector) என்ற கருவி அனைத்து மத்திய சிறைகள் மற்றும் தனிக் கிளைச்சிறை, பூந்தமல்லி சிறைகளுக்கு ரூ.325.00 இலட்சம் தொடரா செலவினத்தில் கொள்முதல் செய்யப்படும்.

5. 105 கிளைச் சிறைகள், 8 மாவட்ட சிறைகள் மற்றும் பெண்கள் (இணைப்பு) சிறை, திருப்பூர் துணைக் கருவிகளுடன் மறைகாணிகள் ஆகியவற்றில் கூடிய 600 அமைத்தல் மற்றும் 9 மத்திய சிறைகளில் காணொளி சுவர் வசதி ஏற்படுத்துதல். ஆத்தூர், கிளைச் சிறைகள் மற்றும் திண்டுக்கல், விருதுநகர், நாகர்கோவில், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கோபிச்செட்டிப்பாளையம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்ட சிறைகள் மற்றும் பெண்கள் (இணைப்பு) சிறை, திருப்பூர் ஆகியவற்றில் துணைக்கருவிகளுடன் கூடிய 600 மறைகாணிகள் அமைக்கவும் மற்றும் 9 மத்திய சிறைகளில் காணொளிச் சுவர் வசதியும் ரூ. 1150.00 லட்சம் தொடரா செலவினத்தில் ஏற்படுத்தப்படும்.

6. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை அலுவலகத்தின் கணினி பாதுகாத்து சார் தரவுகளை (Data) வைத்திடும் பொருட்டு குறும் பரப்பு இணையம் (Local Area Network) மற்றும் தடுப்புச் சுவர் (Fire Wall) ஆகியவற்றை தலைமை அலுவலகத்தில் அமைத்தல், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை அலுவலகத்தின் கணினி சார் தரவுகளை (Data) பாதுகாக்கும் பொருட்டு, குறும் பரப்பு இணையம் (Local Area Network) மற்றும் தடுப்புச் சுவர் (Fire Wall) ஆகியவை ரூ. 59.90 லட்சம் தொடரா செலவினத்தில் அமைக்கப்படும்.

7. அனைத்து மத்திய சிறைகளுக்கும் மின்னணு தொழிற்நுட்பத்துடன் கூடிய 450 நடைபேசிகள் (Digital Mobile Radio Walkie -Talkie) மற்றும் துணைக்கருவிகளுடன் கூடிய ரிப்பீட்டர் செட்டுகள் வழங்குதல். சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, மின்னணு தொழிற்நுட்பத்துடன் கூடிய 450 நடைபேசிகள் (Digital Mobile Radio Walkie-Talkie) மற்றும் துணைக் கருவிகளுடன் கூடிய 15 ரிப்பீட்டர் செட்டுகள் ரூ. 300 லட்சம் தொடரா செலவினத்தில் அனைத்து வழங்கப்படும்.

8. தடை செய்யப்பட்டபொருட்கள் சிறைக்குள் வருவதை துல்லியமாக கண்டறியும் பொருட்டு, ஏற்கனவே அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று 13 மாவட்ட சிறைகளுக்கு ஊடுகதிர் அலகிடல் கருவிகள் (X-Ray Baggage Scanner) ரூ. 273 லட்சம் தொடரா செலவினத்தில் வழங்கப்படும்.

9. அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் உள்ள உணவு வழங்கும் பழைய தள்ளுவண்டிகள், உலர் மற்றும் ஈரப்பத மாவு அரைக்கும் இயந்திரங்களுக்கு பதிலாக உணவு வழங்கும் புதிய மின்சார வண்டி (e-auto), உலர் மற்றும் ஈரப்பத மாவு அரைக்கும் இயந்திரங்கள் (தலா 2 எண்கள்) ரூ. 123.60 லட்சம் தொடரா செலவினத்தில் கொள்முதல் செய்யப்படும்.

10. சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் அறிக்கையின் அடிப்படையில் குழுவின் உணவு முறை மற்றும் அளவினை மாற்றி வழங்கிடும் உணவின் பொருட்டு ஆண்டுக்கு ரூ. 2600 லட்சம் கூடுதல் தொடர் செலவினத்தில் செயல்படுத்தப்படும்.

11. சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறைத்துறை துணைத்தலைவர் (தலைமையிடம்) பதவியை சிறைத்துறை தலைவர் (தலைமையிடம்) என்று தரம் உயர்த்தப்படும்.

12. சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால் அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும்.

13. சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்டு “Freedom” என்ற குறியீட்டு பெயரில் சிறைச் சந்தைகளில் தற்போது விற்கப்பட்டு வரும் பொருட்கள் இனி தமிழ்நாடு அங்காடிகளிலும் விற்பனை செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.