தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது. தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும்’’. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.