Take a fresh look at your lifestyle.

‘Neighbour hood Watch Scheme’: ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய காவல் திட்டம்:கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அறிமுகப்படுத்தினார்

259

Neighbour hood Watch Scheme ‘அக்கம் பக்கத்தினரை கண்காணிக்கும்’ புதிய சைக்கிள் ரோந்துக் காவல் திட்டத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் அக்கம் பக்கத்தினரை கண்காணிக்கும் திட்டத்தின் கீழ் Neighbour hood Watch Scheme என்ற புதிய காவல் ரோந்துப்பணி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்து அர்ப்பணிப்புள்ள காவல் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் காவல் நிலைய பகுதிகளின் பங்களிப்பவராக செயல்படுவார்கள். அந்தந்த காவல் எல்லைகளில் ‘குடியிருப்பு நலச்சங்கங்கள்’ அவர்களின் தேவைகளை அறிந்து கொள்வதற்காக அவ்வப்போது கூட்டங்களை நடத்த வேண்டும். அர்ப்பணிப்புள்ள இந்த ரோந்துக் காவல் பணியாளர்களை கொண்டு காவல் நிலைய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் குறைதீர்க்க வேண்டி அவர்களின் வீட்டின் அருகே தினசரி சென்று உதவுவார்கள்.

காவல் துறையினரையும் பொதுமக்கள் காணும் வகையில் வீட்டுக்கு வீடு சைக்கிள் ரோந்து செல்கின்றனர். மேலும் அவர்கள் குடியிருப்புப்பகுதியின் பாதுகாப்பு ஊழி யர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களால் முடிந்தவரை முக்கியக் குற்றம் தொடர் பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் அவர்களை காவல்துறையினரில் கண் மற்றும் செவியாக செயல்பட வைத்து குற்றங்களை தடுக்க முயற்சி செய்வார்கள்.  சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்து வார்கள், குற்றங்களை குறைத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இது ஏதுவாக அமையும்’’ இவ்வாறு தெரிவித்தார்,