Take a fresh look at your lifestyle.

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டு ஜெயில்: கோர்ட் தீர்ப்பு

41

2018ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ. 5,000- விதித்து கனம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, W-6 அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேற்படி சிறுமிக்கு பாலியல் தொலை கொடுத்த எதிரியை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (31.03.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி வழக்கில் எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி 33 வயது குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.