Take a fresh look at your lifestyle.

லயோலா கல்லூரியுடன் தமிழ்நாடு காவல்துறை இணைந்து நடத்திய ‘புதிய இந்தியா உருவாக்குவோம்’ நிகழ்ச்சி * டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்

28

லயோலா கல்லூரியுடன் காவல்துறை இணைந்து நடத்திய ‘புதிய இந்தியா உருவாக்குவோம்’ நிகழ்ச்சியை டிஜிபி சைலேந்திரபாபு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

லயோலா கல்லூரி, தமிழ்நாடு காவல்துறை மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவுடன் இணைந்து நடத்தும் “புதிய இந்தியா உருவாக்குவோம்” என்ற நிகழ்ச்சி நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பெண்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள், தற்காத்தல் மற்றும் தடுப்புமுறைகள் பற்றியும் குடும்ப வன்முறைகள், பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கட்டுரைகள் எழுதியும், குழந்தை திருமணங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதைகள் எழுதியும், பெண்களுக்கெதிரான வலைதள வன்கொடுமைகள், சமூக ஊடக வன்முறைகள் பற்றிய விழிப் புணர்வை சித்திரமாக சித்தரித்தும் மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிகாட்டினர். இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி கல்பனாநாயக் கல்லூரி அலுவலக நிர்வாகிகளை கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பிக்கள் கிங்ஸ்லி, ஜெயஸ்ரீ, துணைக்கமிஷனர் வனிதா மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.