பசித்தோரின் பசியகற்றுவோம் – நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கிய தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு
தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பான SSF சார்பில் கடந்த 110 நாட்களாக சென்னை நகரில் அரசு ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு சார்பில்
‘பசித்தோரின் பசியகற்றுவோம்’ என்ற திட்டத்தின் கீழ் தினமும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மாதக் கணக்கில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. தொழிலுக்கு சென்று குடும்பம் போற்றும் குடும்ப தலைவரே நோய் வாய்ப்பட்டு கிடக்கும் சூழ்நிலையில் வருமானம் இன்றி மிகவும் சிரமமப்படும் இவர்களுக்கு ஒரு நேர உணவு கூட கிடைப்பது சவாலான விஷயமாகி விட்டது. இப்படிப்பட்ட நோயாளிகளின் துயர் துடைக்கும் வகையில் தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பும் இணைந்து தொடர்ச்சியாக கடந்த 110 நாட்களாக சென்னை அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி உணவு விநியோகம் துவங்கியது. இது வரையில் இருபதாயிரம் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனையிலும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் காயல் ஜெஸ்முதீன் தெரிவித்தார். இந்த உணவு விநியோக திட்டத்திற்கு சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் எம் கமாலுதீன் ஸகாபி அல்ஹிகமி மற்றும் மற்றும் தமிழக முஸ்லிம் ஜமாஅத் சென்னை தலைவர் ஸய்யிது ராஷித் புஹாரி, செயலாளர் முஹம்மது ஹாஜி முஹம்மது அலி ஹாஜி தலைமை தாங்கி செய்தனர்.