தென்னிந்திய சினிமாவில் விரைவாக வளர்ந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் உருவாகி வருகிறது. மேலும் சைரன், ரகு தாத்தா என சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து போலோ ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். நானியுடன் இணைந்து நடித்துள்ள தசரா விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மெல்லிய கருப்பு புடைவை அணிந்திருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.