Take a fresh look at your lifestyle.

காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் வெடி விபத்து:- 8 பேர் பலி

36

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் என சுமார் 30-க்கும் மேற்பட் டோர் வேலைபார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் வேலை பார்த்து வந்தனர். பகல் 11.30 மணியளவில் இங்குள்ள 4 பட்டாசு குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமானது.

மேலும் அந்த கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது. அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் தீயில் கருகி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 15 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் ஆர்த்தி, டிஐஜி பகலவன், எஸ்பி டாக்டர் எம். சுதாகர் , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.