Take a fresh look at your lifestyle.

ஆவடியில் ITF ட்ரையத்லான்: உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

92

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தம் விதமாக ITF இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து இன்று ட்ரையத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது.

போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நடந்த இந்த “ட்ரையத்லான்” நிகழ்ச்சியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த விளையாட்டுப் போட்டியில் 16 வயது முதல் 40 + வயது வரை உள்ள பலதரப்பட்ட வயதுடையவர்கள் கலந்து கொண்டனர். இந்த மூன்று வயது பிரிவினரும் 750 மீ நீச்சல், 20 கிமீ சைக்கிள் ஓட்டம் மற்றும் 4 கிமீ ஓட்டம் ஆகியவற்றை ஓடி முடித்தனர். இந்த ஓட்டப்பந்தயத்தில் 18 வெவ்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.