Take a fresh look at your lifestyle.

ஒரே நாளில் 680 ரவுடிகளிடம் நேரில் விசாரணை: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை

62

சென்னை நகர காவல்துறையில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், ரவுடிகளுக்கு (DARE) எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 680 ரவுடிகளிடம் நேரில் சென்று கண்காணித்தும், 7 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை மேற்கொண்டும், 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 36 குற்றவாளிகளின் நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் ரவுடிகளின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கமிஷனர் சங்கர்ஜிவால் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (HS Rowdy elements) எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (24.03.2023) ஒரு நாள் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில், 680 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் (HS Rowdies) நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே, 2,538 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றுள்ள நிலையில், நேற்றைய (24.03.2023) சிறப்பு சோதனையில், 7 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெற ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, 406 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில், மேலும், 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை பிடித்தும், காவல்துறை தொடர் விசாரணை காரணமாக 32 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தும், மொத்தம் 36 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது. ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரித்துள்ளார்.