Take a fresh look at your lifestyle.

மதுரையில் ரூ. 166 கோடி நீதிமன்ற கட்டிடங்கள்: ஸ்டாலின் முன்னிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல்

27

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய்.சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், முதலமைச்சர் மயிலாடு துறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்தார். கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 968 சதுர அடி பரப்பளவில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இப்புதிய நீதிமன்ற கட்டடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.