Take a fresh look at your lifestyle.

கொரோனா கொடுமையால் அரசியலில் இருந்து விலகினேன்: நடிகர் ரஜினி

53

சென்னையில் நடந்த தனியார் அறக்கட்டளை 25-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது, நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா 2வது அலை தொடங்கி விட்டது. நான் அந்தச் சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். அப்படி செல்வதாக இருந்தால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் சென்றால் முதலில் என் முக கவசத்தை கழற்ற வேண்டியிருக்கும். அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இயலாத காரியம். இதை எப்படி மக்களிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தேன். அப்போது என்னுடைய மருத்துவர், ‘யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் கூறுகிறேன். ரசிகர்களிடம் நான் விளக்கம் அளிக்கிறேன்’ என்று கூறி எனக்கு துணையாக நின்றார். அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தேன் என தெரிவித்தார்.