Take a fresh look at your lifestyle.

சென்னை மக்கள் அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவன்: மோடி டுவிட்

36

நான் எப்போதெல்லாம் சிறப்பான சென்னை நகரத்துக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் உற்சாகமடைகிறேன் என்று மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, தனது சென்னை பயணம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி, “நான் எப்போதெல்லாம் இந்த சிறந்த நகரத்திற்கு வருகிறேனோ அப்போது எல்லாம் உற்சாகமடைகிறேன். சென்னை மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவன்” என கூறியுள்ளார்.