பாலிவுட் பிரபல நடிகை மாதுரி தீட்சித். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2008ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா தீட்சித் இன்று அதிகாலை காலமானார். இவரின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 90 வயதாகும் இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.