அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இன்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் 24 ந் தேதி தீர்ப்பு சொல்வதாக நீதிபதி தெரிவித்தார்.தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் களுக்கும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாதம் நடை பெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிபதி குமரேஷ்பாபு மேற்கண்ட தீர்ப்பை அளித்தார்.