Take a fresh look at your lifestyle.

5–ந் தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் பொதுச்செயலாளரான பின் எடப்பாடி முதல் கையெழுத்து

29

அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அடுத்த மாதம் (ஏப்ரல்) 5 ந் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளராக இன்று பொறுப்பு ஏற்ற பின் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்‌ செயலாளரும், முன்னாள்‌ முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணா தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 புதன்கிழமை முதல் தலைமைக் கழகத்தில் வினியோகிக்கப்படும். கழக உடன்பிறப்புகளால், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ.10 வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.