Take a fresh look at your lifestyle.

ஆவடியில் இலவச நீட் பயிற்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

82

ஆவடி காவல் ஆணையரக காவலர்களின் பிள்ளைகளுக்கு இலவச நீட் பயிற்சியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.

ஆவடி காவல் ஆணையம் தொடக்கப்பட்டது முதல் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப
உறுப்பினர்களுக்காக பல நலத்திட்டங்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பிள்ளைகளுக்காக நீட் பயிற்சி வகுப்புகளை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். ஆவடி பிள்ளைகளுக்காக காவல் ஆணையரகத்தின் காவலர்களின் இலவச நீட் பயிற்சி மற்றும் பயிற்சி வகுப்புகளை வழங்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதற்கட்டமாக 24 நாட்களுக்கான ஊக்க வகுப்பில் 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் வருங்காலத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.