Take a fresh look at your lifestyle.

பொதுச் செயலாளராக எடப்பாடி பொறுப்பேற்றார் எடப்பாடி: அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை

33

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை அடுத்து இன்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தன்னை ஒருமனதாக தேர்வு செய்ததற்காக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி வணங்கினார். இதேபோன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.