சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து போக்குவரத்து போலீசார் ‘இ’ சலான் மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டத்தை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ஆவடி காவல் ஆணையரகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் இ சலான் திட்டத்தை (நேரடி பணமில்லா அபராதம் செலுக்கும் முறை) நேற்று முதல் துவங்கியது. இந்த இ சலான் கருவிகள் சென்னை நகரில் உள்ளது போன்று National Informatics Centre (NIC), New Delhi-யால் உருவாக்கப்பட்டு இணையம் வழியாக செயல்படக் கூடியது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன், வாகன பதிவிற்கான வாகன் (Vahan) இணையதளத்துடனும், ஓட்டுநர்களின் உண்மை தன்மை உறுதி செய்யப்படுகிறது.
மேலும் இந்த புதிய உரிமம் மென்பொருள் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மீதும் வழக்குகள் பதியலாம். அபராதம் செலுத்தபடாமல் நிலுவையில் இருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் Fitness Certificate (FC), உரிமையாளர் பெயர் மாற்றம் (Ownership Transfer), Hypothecation Cancellation போன்ற எந்த சேவைகளையும் பெற இயலாது, மேலும் போக்குவரத்து அதிகாரிகள் வழக்குகள் பதியும்போதே விதிமீறலில் ஈடுப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்ய பரிந்துறை செய்யும் வசதியும் கொண்டது. இத்தனை வசதிகளை கொண்ட 100 இசலான் கருவிகள் மற்றும் நிலையான QR குறியீடு ஆகியவை நேற்று ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்.