Take a fresh look at your lifestyle.

போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்படம்: சிறந்த படத்துக்கு பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

76

போதைப் பொருட்களுக்கு எதிராக (Drive Against Drugs) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறந்த விழிப்புணர்வு ஆவண குறும்படம் (Documentary Films) போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த 4 குறும்படங்களின் இயக்குநர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கான காமிக் தொடர் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் காவல் குழுவினர் போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஈடுபாட்டை உறுதி செய்யும் நோக்கத்தில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக “Drive Against Drugs” என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு மற்றும் போதை தடுப்பு குறித்து ஆவண குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்த 30.12.2022 அன்று அறிவிக்கப்பட்டு, திரைப்பட இயக்குநர் திரு.விக்னேஷ் சிவன் தலைமையிலான குழுவினருடன் ஆவண குறும்படம் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆர்வமாக 300 நபர்கள் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை தயார் செய்து இணையதளம் மூலம் அனுப்பி வைத்தனர்.

திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் தலைமையிலான குழுவினர் மேற்படி 300 குறும்படங்களை பார்வையிட்டு, சிறந்த 10 ஆவண குறும்படங்களை தேர்வு செய்தனர். பின்னர் இக்குழுவினர் மீண்டும் முழுமையாக ஆய்வு செய்தும், கலந்தாலோசித்தும், இதில் முதல் 3 இடங்களுக்கு 4 ஆவண குறும்படங்களை தேர்வு செய்தனர். இன்று (25.03.2023) காலை, இராயப்பேட்டை, சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலையில் “Drive Against Drugs” குறும்படம் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.