Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரகத்தில் சோலார் பவர் போக்குவரத்து சிக்னல் * கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

23

தமிழகத்திலேயே முதன்முறையாக காவல்துறையில் சோலார் பவர் மூலம் இயங்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னலின் இயக்கத்தை ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.

சென்னை, ஆவடி காவல் ஆணையரகம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி துவங்கப்பட்டு அதன் முதல் போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அங்கு பல்வேறு போக்குவரத்து மேலாண்மை திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாவின் சந்திப்பில் தமிழகத்திலேயே முதன்முறையாக சூரிய சக்தி மூலம் இயங்கும் தானியங்கி சமிக்ஞை விளக்கு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் எவ்வித சிரமமின்றி செல்ல முடியும். இந்த சூரிய சக்தி தானியங்கி சமிக்ஞை விளக்கு எரிவதற்கு மின்சாரம் தேவையில்லை. மேலும் 24 மணி நேரமும் சூரிய சக்தியின் மூலம் இது ஒளிரும். நேற்று அதன் இயக்கத்தை ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். தமிழக காவல்துறையில் சோலார் பவரில் இயங்கும் சிக்னல் தொடங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்ப குறிப்பிடத்தக்கது.