Take a fresh look at your lifestyle.

சிறைவாசிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் ‘கட்டளை’ மற்றும் ‘கட்டுப்பாட்டு’ மையம் * டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்

40

சென்னை, சிறைத்துறை தலைமையகத்தில் சிறைவாசிகளின் செயல்பாடுகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ‘கமாண்ட்’ மற்றும் ‘கட்டுப்பாடு’ மையத்தை டிஜிபி அமரேஷ் புஜாரி தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் ரூ. 49.5 லட்சம் செலவில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதன் செயல்பாட்டை துவங்கி வைத்த சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி கூறியதாவது, ‘‘இந்த நவீன வசதி மூலம் சிறை பாதுகாப்பை மேம்படுத்தவும், சிறைக்குள் சிறை வாசிகளின் நடமாட்டம் மற்றும், சிறை ஊழியர்களின் பணியை கண்காணிக்கவும், அனைத்து மத்திய சிறைகளிலும், பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களிலிருந்தும் நேரடி ஒளிபரப்புகளை மையத்தின் காணொளி திரையில் காட்சிப்படுத்த முடியும். சிறைகளில் சமீபத்தில் செயல் படுத்தப்பட்டுள்ள உடலோடு ஒட்டிய கேமராக்களின் நேரடி வீடியோ காட்சிகள் இந்த ‘கட்டளை மற்றும் கன்ட்ரோல்’ திரையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் இந்த வீடியோ 24 மணி நேரமும் செயல்படும். இந்த வீடியோவுக்குள் உள்ள மென்பொருளில் உயர்நிலை வீடியோ பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன.

இந்த அமைப்பு சிறைகளில் நடக்கும் ஆர்வமுள்ள விஷயங்களில், விழிப்பூட்டல்களை உருவாக்கும் திறன் கொண்டது. ஒவ்வொரு சுழற்சி முறையிலும் 2 அதிகாரிகள் அடங்கிய ஒரு பிரத்யேக சிறை அதிகாரிகளின் குழு 3 சுழற்சி முறையாக 24 மணி நேரமும்
காணொளி திரையை பார்க்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருப்பார்கள். இந்த வீடியோ ஒரு தொழில்நுட்ப ஆய்வாளரின் கீழ் செயல்படும், அவருக்கு உதவி தொழில்நுட்ப ஆய்வாளர் உதவி செய்வார். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகளின் நேரடி நிகழ்வுகளை பார்க்கவும், தேவைப்பட்டால் மற்றும் உடனடி முடிவுகளை எடுக்கவும் உதவும்’’.