பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் மோடி தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:– சென்னை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.