சென்னை, மாதவரம் பகுதியில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை, மாதவரம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Madavaram) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (14.03.2023) மதியம் மாதவரம், ஆந்திரா பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்கப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த அப்பாஸ், 42 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி அப்பாஸ் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரி அப்பாஸ் விசாரணைக்குப் பின்னர் இன்று (14.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.