சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள சொத்துவரி செலுத்தாத 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள டிஎல்எப் கமெண்டர்ஸ் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு மொத்தம் 18 தளங்களை கொண்ட குடியிருப்பாகும். இதில் 385 வீடுகள் உள்ளன. இதில் 70 வீடுகள் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிதி ஆண்டுக்கான சொத்துவரியும் சேர்த்து 9 லட்சத்து 72 ஆயிரத்து 143 ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்று முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டும் வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 70 அடுக்குமாடி குடியிருப்புகளை பூட்டி சீல் வைத்தனர்.