முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு துணைக்கமிஷனர் திருநாவுக்கரசு எழுதிய “Best of You” என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக காவல்துறையில் முதல்வர் பாதுகாப்புப்பிரிவு துணைக்கமிஷனராக இருப்பவர் திருநாவுக்கரசு. இவர் தன்னிலை உயர்த்து என்ற நூலை எழுதியுள்ளார். அதன் ஆங்கில பதிப்பாக “Best of You” என்ற பெயரில் எழுதியுள்ளார். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.10.2023) முகாம் அலுவலகத்தில் ‘தன்னிலை உயர்த்து’ என்ற நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Best of You நூலினை வெளியிட்டார். அப்போது முதல்வருடன் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவால், உளவுப்பிரிவு தலைவர் டாக்டர் செந்தில்வேலன், உளவுப்பிரிவு டிஐஜி ராஜேந்திரன் மற்றும் குயின் மிரா சர்வதேச பள்ளியின் மேலாண்மை இயக்குநர் அபினாத் சந்திரன் மற்றும் துணைக்கமிஷனர் திருநாவுக்கரசுவின் மனைவி திருமதி லாவண்யா ஷோபனா ஆகியோர் உள்ளனர்.