நடிகை மீனா சமீபத்தில் அளித்த பேட்டி ‘‘எனக்கு ஹ்ரித்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும். என்னுடைய திருமணத்திற்கு முன்பு என் அம்மாவிடம், எனக்கு ஹ்ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளையை பாருங்க என்று கூறினேன். நான் ஹ்ரித்திக் ரோஷனின் மிக பெரிய ரசிகை. அவரின் நடிப்பு, நடனம் எல்லாமே நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
கணவர் மறைவுக்கு பின் மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் அதில் உன்மை இல்லை என மீனா தரப்பு முன்பே விளக்கம் அளித்து விட்டது குறிப்பிடத்தக்கது.