Take a fresh look at your lifestyle.

927 எஸ்ஐக்களின் பயிற்சி நிறைவு விழா: காணொலியில் பங்கேற்ற முதல்வர்: பதக்கங்கள் வழங்கி டிஜிபி பாராட்டு

927 sub inspectors passing out parade in tamil nadu police acadamy

82

சென்னை வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் ஒரே நேரத்தில் 927 உதவி ஆய்வாளர்கள் 52 வார (ஒரு வருடம்) காலம் அடிப்படைப்பயிற்சி பெற்றனர். அவர்கள் பயிற்சி நிறைவடைந்ததை ஒட்டி அவர்களுக்கு வண்ணமிகு அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமையுறை ஆற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தார். டிஜிபி சைலேந்திர பாபு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கங்களை வழங்கினார்.

52 வாரங்கள் கொண்ட அடிப்படை பயிற்சியில் அவர்களுக்கு தேவையான அறிவு, திறமைகள் தொழில் முறை நடத்தைகள், ஒருமைப்பாடு மற்றும் நேர்மை அதோடு நவீன மற்றும் கணினி மயமாக்கப்பட்ட மாநில காவல்துறையில் உயர்த்தப்பட்ட திறமைகள், நம்பகத்தன்மை அடிப்படை தீவிரவாதம். நுண்ணறிவு. அந்நிய ஊடுருவல், சமுதாய காவல் பணி. தலைமை பண்பு, செய்தி தொடர்பு கொள்ளுதலில் திறன், சட்டத்தை அமலாக்கும் திறன், கணினி குற்றங்கள் CCTNS போன்ற பல பயிற்சிகள் திறமை வாய்ந்த நிபுணர்கள்மற்றும் உயர் காவல் அதிகாரிகள் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் பயிற்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை எவ்வாறு கையாள்வது என்று முதன்முறையாக 20 SOC Investigation Modules அமைத்து, அதனை விசாரணை செய்த அதிகாரிகளை நேரில் வரவழைத்து பயிற்சிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன. மேலும் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளான Chief Office, SCRB, CBCID, SBCID, COP/ Chennai, NSG, Vigiliance & Anti Corruption, PTC, EOW, Railways, Central Prison, அதன் பணிகளை நேரடியாக பார்வையிட்டும் மேலும், நீதிமன்றத்தின் பணிகள், சுகாதாரி துறையின் பிணக்கூராய்வு பணிகள், சிறார் சீர்திருத்தப் பள்ளியின் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு இவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பணிகளையும் அன்றாட நடைமுறைகளையும் வெளியரங்கு பயிற்சியாக வழக்கமான கவாத்தோடு Jungle Survival Training சத்தியமங்கலத்திலும், நவீன ஆயுதங்கள் கையாளுதல், நீச்சல், கராத்தே, யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.மேலும் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு தேர்தல் பாதுகாப்பு பணியை செவ்வனே செய்தார்கள்.

அனுபவமிக்க காவல்துறை அதிகாரிகளின் பல்வேறு விரிவுரைகளும்,கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும், அனுபவம் மிக்க அதிகாரிகள் கொண்டு பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை நுட்டங்களை உள்ளடக்கிய படங்களை கற்பிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தலைமையுறை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின். காவல்துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு காவல் உயர்பயிற்சி இயக்குநர் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் இறுதியில் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்சியில் காவல் உயர்பயிற்சியக இணை இயக்குநர் ஐஜி ஜெயகவுரி, எஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.