Take a fresh look at your lifestyle.

6 ஆண்டுகளுக்குப் பிறகு 72 வயது செக்ஸ் கிழவனுக்கு 10 ஆண்டு ஜெயில்

conviction for 72 years old man

128

8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 72 வயது முதியவருக்கு 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 8 வயது சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தொடர்பாக குமரன் நகர் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 72) என்பவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.

பின்னர் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (18.05.2022) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி ரங்கநாதன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ரங்கநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் என தண்டனை விதித்து கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.