Take a fresh look at your lifestyle.

சென்னை அடையாறில் 57 செல்போன்கள் மீட்பு: இருவர் கைது

30

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளி மற்றும் திருட்டு செல்போன்களை வாங்கிய நபர் என இருவரை போலீசார் கைது செய்தனர். 56 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.19,700- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அடையார் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன், கடந்த 19.03.2023 அன்று அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மேற்படி அர்ஜுனிடம் எழுத பேனா கேட்பது போல நடித்து, அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து அர்ஜுன் அடையார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அடையார் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர்.

மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாபு (எ) பல்சர் பாபு (32) ரு, தண்டையார் பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் அளித்த தகவலின் பேரில் திருட்டு செல்போன்களை வாங்கிய ஆனந்த் (25) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 விலையுயர்ந்த செல்போன்கள் உட்பட 56 செல்போன்கள், ரொக்கம் ரூ.19,700/- மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாபு (எ) பல்சர் பாபு சென்னையில் அடையார், அசோக்நகர், கிண்டி, சைதாப்பேட்டை, கே.கே.நகர் மற்றும் வேளச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் செல்போன்களை திருடி மேற்படி ஆனந்திடம் விற்பனை செய்துள்ளதும், பாபு (எ) பல்சர் பாபு மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதும், 4 பிடியாணைகள் நிலுவையிலுள்ளதும், ஏற்கனவே 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.