சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்.
தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்ட னையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக
ஜெயக்குமார், தலைமைக்காவலர், உதவிக்கமிஷனர் மக்கள் தொடர்பு அலுவலகம், வேப்பேரி.
முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு (L&O) மற்றும் குற்றப்பிரிவு (Crime) காவல் நிலையங்களில் பணிபுரியும் 173 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து (Traffic) காவலில் பணி புரியும் 149 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையில் (AR) பணிபுரியும் 80 காவல் ஆளிநர்கள், நுண்ணறிவுப்பிரிவு (IS), மத்திய குற்றப்பிரிவு (CCB), நவீன காவல் கட்டுப் பாட்டறை (MCR), சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு (SCP), உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு (Highcourt Security), குற்ற ஆவண காப்பகம் (CRB), பணியிடை பயிற்சி மையம் (Inservice Training), பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CAWC) உள்ளிட்ட சிறப்பு பிரிவு களில் பணிபுரியும் 85 காவல் ஆளிநர்கள் மற்றும் இதர பிரிவுகளான இரயில்வே (RAILWAYS), கடலோர பாதுகாப்பு குழுமம் (CSG) மற்றும் செயலாக்கம் (OPERATIONS) ஆகிய காவல் பிரிவு களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் 57 என மொத்தம் 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்று (21.02.2023) மாலை, எழும்பூர், ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களு க்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ், ‘குற்றம்’ கூடுதல் காவல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், உளவுப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல் இயக்குநர் சந்தீப்மிட்டல், செயலாக்கம் கூடுதல் காவல் இயக்குநர் பாலநாக தேவி, பொரு ளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் அபின் தினேஷ் மொடக், ரயில்வே கூடுதல் காவல் இயக்குநர் வனிதா மற்றும் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அன்பு, லோகநாதன், கபில்குமார் சி சரத்கர், மகேஷ்வரி ஆகியோர் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்ளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.