Take a fresh look at your lifestyle.

41 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் ஐபிஎஸ்

41 ips transfered in tamilnadu police

72

தமிழகத்தில் கோவை போலீஸ் கமிஷனர் மற்றும் 41 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:  தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபி அமல்ராஜ் தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கண்ணன் ஆயுதப் படை ஐஜியாக அமர்த்தப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, வடக்கு மண்டல ஐஜியாகவும், மத்தியக் குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனராக டெக்னிக்கல் சர்வீசில் இருந்த மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மண்டல ஐஜியாக இருந்த பாலகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராகவும், நெல்லை கமிஷனராக இருந்த சந்தோஷ்குமார் மத்திய மண்டல ஐஜியாகவும், திருநெல்வேலி கமிஷனராக அவினாஸ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம் விவரம்

சுந்தரவதனம் – கரூர் எஸ்.பி.,
சிவபிரசாத் – எஸ்பி, மதுரை
பாஸ்கரன் – எஸ்பி திண்டுக்கல்
சுரேஷ்குமார் – எஸ்பி, திருவாரூர்
பிசி கல்யாண் – எஸ்பி, திருவள்ளூர்
கார்த்திகேயன் – எஸ்பி. திருவண்ணாமலை
வருண்குமார் – எஸ்பி. மதுரை அமலாக்கப்பிரிவு
தங்கதுரை – எஸ்பி. ராமநாதபுரம்,  அதே போல சிபிசிஐடி எஸ்ஐடி பிரிவு ஐஜி ஜெயகவுரி தமிழ்நாடு போலீஸ் அகடாமி கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகர் துணைக்கமிஷனராக விஜயகுமார், ராமநாதபுரம் கடலோர காவல்படை எஸ்பியாக சுந்தரவடிவேல், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பவன்குமார் ரெட்டி நெல்லை சிட்டி திருநெல்வேலி கிழக்கு துணைக்கமிஷனராக சீனினிவாசன், எஸ்பிசிஐடி எஸ்பியாக கார்த்திக் குற்றச்செயல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக -ஜெயந்தி, சென்னை ரெட்ஹில்ஸ் துணைக்கமிஷனராக மணிவண்ணன் உள்பட 31 எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.