மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற பெண், நான்கு கால்களுடன் ஒரு பெண் குழந்தையை பெற்றெ டுத்துள்ளார். இது நாடு முழுவதும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. கமலா ராஜா மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவில் பிறந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையின் எடை 2.3 கிலோவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது குழந்தையை பரிசோதித்து வரும் மருத்துவர்கள் குழு, குழந்தையின் கூடுதல் கால்களை அகற்ற முடியுமா என்று யோசித்து வருகின்றனர்.
குழந்தையை பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழுவின் கூற்றுப்படி, குழந்தையின் குறை பாடு இஸ்கியோபகஸ் (Ischiopagus) எனப்படும் ஒரு நிலை காரணமாகும். அதாவது, கருவில் ஒட்டிக்கொண்ட இரட்டையர்களின் கரு உருவாம். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் இரட்டை யர்களில் ஒரு உடல் முற்றிலும் சிதைந்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டு களை விட்டுவிட்டு மற்ற சிதையாத கருவின் உடலுடன் இணைந்துவிடும் என்று கூறப் படுகிறது. இந்த அரிதான மற்றும் அசாதாரணமான பிறப்பு பாலிமிலியா எனப்படும் ஒரு நிலை காரணமாகும் என தெரிவித்துள்ளனர்.