தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் அமல்ராஜ் கூறுகையில், ‘‘கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை போதைப்பொருள் தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 196 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 317.900 கிலோ கஞ்சா, 100 கிராம் கொக்கைன், 150 கிராம் மெத்தபட்டமைன் (மதிப்பு ரூ. 7 லட்சம்), LSD Stamp 55 (மதிப்பு 1 லட்சம்), 7,709 போதை மாத்திரைகள், ஹெராயின் 0.546 கிராம், கஞ்சா ஆயில் 120 மிலி, 29 இருசக்கரவாகனம், 3 மூன்று சக்கர வாகனம், 9 நான்கு சக்கரவாகனம், மேலும் 4,168 கிலோ குட்கா ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் போதைக்கடத்தல் தொடர்பாக குற்றம் புரிந்த 15 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது’’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.