Take a fresh look at your lifestyle.

சென்னை ஐசிஎப் கொலை வழக்கில் 3 நபர்கள் கைது

47

சென்னை, வில்லிவாக்கம், மூர்த்தி நகரில் மணிகண்டன் 30 என்பவர் அவரது மனைவி, குழந்தை, தம்பி மற்றும் தாயுடன் வசித்து வந்தார். மணிகண்டன் சற்று தொலைவில் தெற்கு திருமலை நகரில் வேறு வீட்டிற்கு குடிபெயர்வதற்காக, கடந்த 01.04.2023 அன்று இரவு தனது வீட்டிலிருந்து பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிட்டு, மனைவி, குழந்தை மற்றும் தாயை வாகனத்தில் அனுப்பி வைத்து, இவர் நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது நள்ளிரவு சுமார் 12.40 மணியளவில் (02.04.2023) தெற்கு திருலைநகரிலிருந்து 3 நபர்கள் அவர்களுக்குள் வாடா போடா என்று பேசிக்கொண்டிருந்துள்ளனர், அவ்வழியே நடந்து சென்ற மணிகண்டன் தன்னை பற்றி அந்த நபர்கள் பேசுவதாக நினைத்து அவர்களிடம் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மேற்படி 3 நபர்களும் கத்தி மற்றும் செங்கற்களால் மணிகண்டனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். தாக்குலில் ரத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவயிடத்திலே இறந்து விட்டார்.

இதுகுறித்து மணிகண்டனின் தம்பி பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், ஐசிஎப் போலீசார் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (24), விக்னேஷ் (24), அலெக்ஸாண்டர் (24) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும் இன்று (03.04.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.