Take a fresh look at your lifestyle.

2,332 கிலோ போதைப்பொருள் தீயில் இட்டு அழிப்பு * ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை

33

தமிழக போதைப்பொருள் நுண்ணிறிவுப்பிரிவு சார்பில் 2,332 கிலோ போதைப்பொருட்கள் தீயில் இட்டு அழித்து ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அறவே ஒழிக்கும் பொருட்டு தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு வாகன சோதனைகள் நடத்தி அவ்வப்போது கிலோ கணக்கில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்படுகின்றனர். அந்த வகையில் பிடிபடும் போதைப்பொருட்கள் நீதிமன்றங்களின் உத்தரவுப்படி அதற்குறிய பிரத்யேக சேமிப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் இம்மாதம் 8ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் போதைப் பொருட்களை அழிக்க பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி நேற்று மொத்தம் 2,332 கிலோ கஞ்சா சென்னை, செங்கல்பட்டு, தென்மேல்பாக்கத்தில் மருந்து ஒழிப்பு குழு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு முன்னிலையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் 8800 கிலோ போதைப்பொருட்கள் தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவால் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.