23 ஆண்டுகளாக சைக்கிளிலேயே காவல் பணிக்கு சென்று வரும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் புஷ்பராணி. இவர் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலனை பேணுதல் போன்ற காரணங்களுக்காக கடந்த 23 வருடங்களாக பணிக்கு சென்று வர சைக்கிளையே பயன் படுத்தி வருகிறார். இது மற்ற போலீசாருக்கு தங்கள் உடல் ஆரோக்கியத்தை எப்படி சிறந்த முறையில் பாதுகாப்பது என்பதற்கு சிறந்த உதாரணமாக அமையும் வகையில் உள்ளது. இது குறித்து தகவல் கிடைத்த டிஜிபி சைலேந்திரபாபு நேற்று சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்பராணியை நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.