23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் 3வது நாளான இன்று தமிழக சார்பு ஆய்வாளர் 2வது பிடித்தார்.
23 வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியை சென்னை, வண்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருகிறது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று 25 கஜம் கார்பைன் துப்பாக்கி சுடுதல் பிரிவில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் ஹேன்டிக்யு முதல் இடத்தையும், சி.ஆர்.பி.எப் வீரர் ஆதித்ய குமார் சர்மா இரண்டாவது இடத்தையும், ராஜஸ்தான் காவல்துறையைச் சார்ந்த ஹேட்ராம் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அதே போல 300 கஜம் சினாப் ரைபில் சுடுதல் பிரிவில், அசாம் ரைபில் படை வீரர் ஜோகம் முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த சார்பு ஆய்வாளர் ராமன் 2வது இடத்தையும், அசாம் ரைபில் படை வீரர் சந்தன் குமார் 3வது இடத்தையும் பிடித்தனர். மேலும் 40 கஜம் ஸ்டேண்டிங் கார்பைன் சுடுதல் பிரிவில், எஸ்.எஸ்.பி படை வீரர் விஜய் குமார், எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் ஹேன்டிக்யு 2வது இடத்தையும், ஆந்திர மாநில காவல்துறையைச் சார்ந்த சந்தோஷ் குமார் 3வது இடத்தையும் பிடித்தனர்.
300 மீட்டர் (நீலிங், ப்ரோன் மற்றும் ஸ்டேண்டிங்) ரைபில் சுடுதல் பிரிவில், ராஜஸ்தான் காவல்துறையைச் சார்ந்த வினோத் குமார் முதல் இடத்தையும், அசாம் ரைபில் படை வீரர் பிமன் பேரா 2வது இடத்தையும், எல்லை பாதுகாப்பு படை வீரர் நீரஜ் பாண்டே 3வது இடத்தையும் பிடித்தனர். நடந்து முடிந்த அனைத்து ரைபில் சுடுதல் பிரிவு போட்டிகளில், அசாம் ரைபில் படை முதல் இடத்தையும், எல்லை பாதுகாப்பு படை 2ம் இடத்தையும், ஒடிசா மாநில காவல்துறை 3ம் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை 4ம் இடத்தையும் பிடித்துள்ளது. நான்காம் நாளான இன்று கார்பைன் துப்பாக்கி சுடுதல் சுடுதல் பிரிவு போட்டிகள் நடைபெறவுள்ளது.